Saturday, December 4, 2021

உன்னின் வண்ணம்.. என்னின் எண்ணமாயிற்று! Your color become my thought!

ஆகாயத்திலும் இருக்கின்றாய்.. 


ஆழ்கடலிலும் நிறைந்துள்ளாய்..


ஆழ்மனத்தையும் ஆட்கொள்கிறாய்..  

உன்னின் வண்ணம்..

என்னின் எண்ணமாயிற்று!

அகண்ட வானின் பூரண சந்திரனாய் என்னை ஒளிக்கச் செய்கிறாய்..

சூழ்ந்த கடலினுள் முத்தைக் காக்கும் சிற்பி போல் எனைக் காத்து நிற்கிறாய்..

வெகுமதி ஏதும் இல்லாமல் கற்பித்தலை துவங்குகிறாய்..

ஆசைகள் அற்ற வாழ்வினை ஏற்கச் செய்கிறாய்..

அகிலம் அனைத்திலும் அங்கமாய் பரவியுள்ளாய்..

பகை எனும் இருளை மனக்குகையில் இருந்து நீக்கச் செய்கிறாய்..

எனக்காக மகிழ்ச்சி அடைகிறாய்..எனக்காக கண்ணீரும் வடிக்கிறாய்..

என் நண்பனாகவும் உடன் நின்றுள்ளாய்.. என் எதிரியாகவும் எதிர் நின்றுள்ளாய்..

சிறு புல்லினிலுள்ளும் அடங்குகிறாய்..விரிந்த வானமாவும் விரவியுள்ளாய்..

பெருச்செல்வத்தையும் ஆள்கிறாய்..சிறு வறுமையையும் சேர்த்துக்கொள்கிறாய்..

வெற்றி தோல்விகளுக்கு இடம் கொடுக்க மறுக்கிறாய்..

என்னைப்போலும் உருவம் அணிகிறாய்..

நீ புரியும் செயல் அனைத்தும் விந்தையே என் கிருஷ்ணா..!

--------------------------------------------------------

Your color become my thought! 

You are there in the vast sky as well.. 
You are there in the deep ocean as well.. 
You are there in my mind as well..
Your color become my thought.. 

You make me brighten as the full moon in the vast sky.. 

You protect me as oyster protects pearl.. 

You started to teach me without any reward.. 

You make me to accept the life with no desires.. 
You have spread fully in all of this world..

You also destroy enmity  in my mind.. 

You are being happy for me.. 
You shed tears for me as well.. 

You are standing with me as a friend.. 
Also, You are standing against as an enemy.. 

You are included on the small grass.. 
Also, you are spread like the vast sky.. 
You ruling over wealthy..
You also add small poverty with you.. 

You refuse to give space for success and failures.. 

You have made up you as look as like me.. 

Everything you do is strange.. My Krishna!


No comments:

Post a Comment

ஒரு விதை வளர்கிறது||The Seed is Growing

ஒரு விதை வளர்கிறது.. அனைத்து சிறந்த வலிமைகளும், அமைதியில் வாழ்கிறது.. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..? அனைத்து சூழ்நிலைகளுக்கும் இது பொருந்து...